நான் கமல் ரசிகன் கிரிக்கெட் வீரர் விஜய்












சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் விஜய், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில்,  ’’மேத்யூ ஹைடன் என்னை அடிக்கடி உற்சாகப்படுத்துவார். இதேபோல மைக் ஹஸ்சியும் ஆலோசனை வழங்குவார்.

எனக்கு பிடித்த பவுலர்கள் மெக்ராத், அம்புரோஸ். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள விரும்புகிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

 நடிகர் கமலஹாசன் எனக்கு பிடித்தமானவர். இளம் வயதில் அவரை சந்தித்து ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்பதில் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தேன்.

நான் அடிக்கடி சினிமா பார்ப்பது கிடையாது. ஆனால் இளம் வயதில் கமலஹாசன் படங்களை பார்க்காமல் இருந்தது கிடையாது’’என்று கூறியுள்ளார்.