உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 59 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
இதன்மூலம் தெண்டுல்கர் அதிக ரன் எடுத்திருந்த ஜேக்காலிசை முந்தினார். அவர் 11 ஆட்டத்தில் விளையாடி 512 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். காலிஸ் 11 ஆட்டத்தில் 501 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் தெண்டுல்கர் ஐ.பி.எல். தொடரில் ஆயிரம் ரன்களை கடந்தார். கில்கிறிஸ்ட், ரெய்னா, ஹைடன், காலிஸ், ரோகித்சர்மா, காம்பீர் ஏற்கனவே ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர்.