பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு



















 இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா நேற்று சிம்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.
ராம் நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்பதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.   சிஐடி அவரை ஆண்மை பரிசோதனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.