விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது ரசிகர்கள் ஆத்திரம்


   
   
கிருஸ்துவராக இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார்.  அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார்.  விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார்.  நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது.    இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது.   இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.
 ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.


 பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.

இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன், 

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
   
                                                                                                                         for free games  Click Here